#Breaking: ஆஸ்கரில் மிகப்பெரிய அதிர்ச்சி.. இந்திய படங்கள் தேர்வு இல்லை.. ஷாக் தகவல்.!
பகீர் செய்தி.! ஆனந்த் அம்பானி திருமணத்தில் 10 லட்சம் கொள்ளை.!! திருச்சியை சேர்ந்த நூதன கொள்ளையர்கள் கைது.!!
குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற அம்பானி இல்ல திருமண விழாவின்போது கொள்ளையில் ஈடுபட்ட திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கொள்ளை சம்பவம் தொடர்பாக திருச்சியைச் சேர்ந்த 5 பேரை போலீசார் டெல்லியில் கைது செய்துள்ளனர்.
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்கள் குஜராத் மாநிலத்தின் ஜாம் நகரில் மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் தொழிலதிபர்கள் விளையாட்டு வீரர்கள் என பல்லாயிரக்கணக்கான விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கொண்டாட்டங்களின் போது கடுமையான திட்டங்களுடன் கொள்ளையில் ஈடுபட்ட திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த 5 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து 10 லட்சம் ரூபாய் பணம் லேப்டாப் மற்றும் ஹார்ட் டிஸ்க்கள் ட்ராலி பேக்குகள் போன்றவையும் கைப்பற்றப்பட்டு இருக்கிறது. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட 5 பேரும் திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த பாலசுப்பிரமணியம் அகமுடையார், தீபக் பார்த்திபன் அகமுடையார்,வீரபத்ரன் முதலியார், அகரம் கண்ணன் முத்தரையர் மற்றும் குணசேகர் உமாநாத் என தெரியவந்துள்ளது.
மேலும் இந்த கொள்ளை கும்பலுக்கு தலைவனான விஜி சுகுமாரன் என்ற மதுசூதனனை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. அம்பானி இல்ல திருமண நிகழ்வில் கொள்ளை அடிக்க திட்டம் போட்டு இவர்கள் ஜாம் நகருக்குள் நுழைய முற்பட்டுள்ளனர். அங்கு கடுமையான பாதுகாப்பு கட்டுப்பாடுகள் இருந்ததால் ராஜ்கோட் அகமதாபாத் மற்றும் ஜாம் நகரின் ஒரு சில பகுதிகளிலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்திருக்கிறது. திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த கொள்ளையர்கள் காந்தியவாதி கொள்ளையர்கள் என அழைக்கப்படுகின்றனர். ஏனெனில் இவர்கள் கொள்ளை சம்பவத்தின் போது எந்தவித ஆயுதத்தையும் பயன்படுத்தாமல் தங்களது அறிவு மற்றும் சமயோகித புத்தி ஆகியவற்றை பயன்படுத்தி திருடுவதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றனர்.