ஜியோவின் புதிய புரட்சி! அதிரடி வேலைவாய்ப்பு; 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை.! - TamilSpark
TamilSpark Logo
இந்தியா Offers

ஜியோவின் புதிய புரட்சி! அதிரடி வேலைவாய்ப்பு; 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை.!

ஜியோ நிறுவனம் தொலைபேசி துறைக்குள் காலடி வைத்ததில் இருந்து பல்வேறு நிறுவனங்கள் ஆட்டம் கண்டுள்ளன. பல்வேறு சலுகைகளை கொடுத்து அணைத்து வாடிக்கையாளர்களையும் தன் பக்கம் இழுத்துவிட்டது ஜியோ நிறுவனம்.

2016-ம் ஆண்டு ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் நடைமுறைக்கு வந்தது. ஜியோ வந்த பிறகு சில தொலைத்தொடர்பு நிறுவனம் காணாமல் போனது. ஜியோ வந்த பிறகுதான் அணைத்து தொலைத்தொடர்பு நிறுவங்களும் கட்டண விலையை குறைக்க தொடங்கியது. தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு நல்ல நல்ல சலுகைகளை வழங்கி வருகிறது ஜியோ நிறுவனம்.

2019 ஜனவரி வரையிலான காலக்கட்டத்தில் ரியலைன்ஸ் ஜியோ நிறுவன சேவையை சுமார் 20 கோடி பேர் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளது. மேலும் ஜனவரி மாதத்தில் மட்டும் சுமார் ஒரு கோடி பேர் ரிலையன்ஸ் ஜியோ நிறுவன சேவையில் இணைந்துள்ளனர். 

இவ்வாறு அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளதால் அதிகமான பணியாளர்களை நியமிக்க முடிவு எடுத்துள்ளது. இதனால் பத்தாம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்த இளைஞர்களுக்கு பல்வேறு வகையான வேலைவாய்ப்புகளை வழங்க அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களும் பகுதிநேரமாக வேலை பார்க்கும் வசதியையும் அளித்துள்ளது.

இதுதொடர்பாக முழு விவரங்களை தெரிந்துகொள்ள careers.jio.com என்ற இணைய முகவரியை தொடர்பு கொள்ளவும்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo