ரேபரேலியில் தடம் புரண்ட ரயில்; 7 பேர் பலி; பிரதமர் இரங்கல்
உத்தர பிரதேச மாநிலம் ரேபரலி அருகே சென்று கொண்டிருந்த நியூ பரக்கா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகினர் பலர் படுகாயமடைந்தள்ளனர்.

ரேபரேலி அருகே ஹர்சந்த்பூர் ரயில் நிலையத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்த நியூ பரக்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் 6 பெட்டிகள் திடீரென தடம் புரண்டன. இந்த விபத்தில் பயணிகள் 7 பேர் பலியாகினர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீடபுகுழுவினர் வாரணாசியில் இருந்து விரைந்து சென்றனர். ரயில் விபத்து நடைபெற்ற இடத்திற்கு ரயில்வே வாரிய தலைவர் அஷ்வினி லோஹனியும் விரைந்துள்ளார்.

மீட்பு மற்றும் நிவாரண பணிகளை விரைந்து செய்ய வேண்டியும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டியும் உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.
Anguished by the loss of lives due to a rail accident in Raebareli. Condolences to the bereaved families and I pray that the injured recover quickly. UP Government, Railways and NDRF are ensuring all possible assistance at the site of the accident: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 10, 2018