BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
பிஞ்சு குழந்தை என்ன பாவம் பண்ணுச்சு! தெலுங்கானா பேருந்து விபத்தில் பரிதாபமாக அம்மாவுடன் பிஞ்சு குழந்தையும் இறந்து கிடக்கும் புகைப்படம்.!
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டியில் நடைபெற்ற பேருந்து விபத்து மாநிலம் முழுவதையும் உலுக்கி விட்டது. அரசு பேருந்து மீது டிப்பர் லாரி மோதியதில் ஏற்பட்ட பேரழிவு விபத்து பல குடும்பங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரங்காரெட்டியில் கொடூரமான மோதல்
ரங்காரெட்டி அருகே இன்று காலை அரசு பேருந்து மீது டிப்பர் லாரி வேகமாக மோதியது. இந்த அதிர்ச்சியூட்டும் விபத்தில் சம்பவ இடத்திலேயே 15 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்ட பயணிகள் கடுமையாக காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பயங்கர விபத்து! மேம்பாலத்தில் நாய் குறுக்கே வந்ததால் டேங்கர் லாரியில் மோதி அப்பளம் போல் நொறுங்கிய கார்! உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு....
மீட்புப் பணியில் வீரர்கள் துடிப்பு
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் பல மணி நேரம் போராடி பஸ்சுக்குள் சிக்கியிருந்த பயணிகளை மீட்டனர். மீட்பு பணியின் போது வெளியான காட்சிகள் நெஞ்சை பதைபதைக்க வைத்தன.
15 மாத குழந்தை உயிரிழப்பு மனதை நெகிழச் செய்தது
இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தவர்களில் 15 மாத குழந்தையும் அதன் தாயாரும் அடங்கினர். அவர்கள் உயிரின்றி கிடக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவியதால் மக்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். விபத்து நிகழ்ந்த இடத்தில் உடல்கள் சாலையில் சிதறிக் கிடந்ததால் மீட்புப் பணியாளர்களுக்கே மனஉளைச்சல் ஏற்பட்டது.
இந்த சாலைப் பாதுகாப்பு மீறல் மீண்டும் பல உயிர்களை பறித்துள்ளது. லாரிகள் மற்றும் பேருந்துகள் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்காததாலேயே இத்தகைய துயரங்கள் நடைபெறுகின்றன என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பெரும் அதிர்ச்சி! தெலுங்கானா மாநில அரசு பேருந்து விபத்தில் பலி எண்ணிக்க 24 ஆக உயர்வு! சாலையில் சிதறி கிடக்கும் உடல்கள்....!!