இந்த நவீன காலத்திலும் இப்படியா? என்னவொரு வித்தியாசமான கல்யாணம்.. வியந்து போன ஊர்மக்கள்!!

ராமாயணம் காவியத்தில் ராமர் வில்லை வளைத்து தனது வீரத்தை காட்டி பின் சீதையை திருமணம் செய்து


ramayanam-based-marriage-happened-in-bihar

ராமாயணம் காவியத்தில் ராமர் வில்லை வளைத்து தனது வீரத்தை காட்டி பின் சீதையை திருமணம் செய்து கொண்டார் என்று நாம் கேள்விபட்டிருப்போம். அதனைப் போலவே பீகார் மாநிலத்தில் சமீபத்தில் பண்டைய கால முறையில் நடைபெற்ற திருமணம் அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் சரண் மாவட்டம் சபல்பூர்க்கு அருகேயுள்ள சோன்பூர் பிளாக் என்ற பகுதியில் ராமருக்கும், சீதைக்கும் ராமாயணத்தில் எவ்வாறு திருமணம் நடைபெற்றதோ அவ்வாறே நடைபெற்றுள்ளது. மேடையில் முதலில் மணமகன், அங்கு வைத்திருந்த பெரிய வில்லை தன் இரு கைகளாலும் எடுத்து வளைத்து ஒடிக்கிறார். 

marriage

 பின்னர் மேடைக்கு வந்த மணமகள், மணமகனுக்கு மாலை அணிவித்து தனது கணவராக ஏற்றுக் கொள்கிறார். பின்னர் அங்கிருந்த அனைவரும் பூக்களை தூவி புதுமணத் தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். வித்தியாசமான முறையில் நடந்த இந்த திருமணம் அப்பகுதியில் பெருமளவில் பேசப்பட்டு வருகிறது. மேலும் சமூக வலைத்தளங்களிலும் அதுகுறித்த வீடியோக்கள் வைரலாகிறது.