இந்தியா

முதல்ல இதுக்கு பதில் சொல்லுங்க! சாந்தமாக ரஜினி போட்ட ஒத்த பதிவு! கொந்தளித்து பதிலடி கொடுத்த சீமான்!

Summary:

rajini tweet about citizenship act

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிராக கண்டனம் தெரிவித்து அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பெரும் போராட்டம் வெடித்தது.

மேலும் டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது போலீசார்கள் மாணவர்கள் மீது தடியடி நடத்தியதால் போராட்டம் வன்முறையாக மாறியது. மேலும் சாலைகளில் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டது.

மேலும் மங்களூரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டி சென்ற நிலையில் மருத்துவமனையின் உள்ளே நுழைந்த போலீசார் ங்கு அத்துமீறல்களில் ஈடுப்பட்டனர்.இவ்வாறு குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் நாளுக்கு நாள் போராட்டங்கள் பெருமளவில் தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில், பிரச்சனைகளுக்கு வன்முறை மற்றும் கலவரம் தீர்வு ஆகாது என்றும், தற்போது நடக்கும் வன்முறை மனதுக்கு வேதனை அளிப்பதாகவும் தெரிவித்திருந்தார். நாட்டு நலன்களை மனதில் கொண்டு இந்திய மக்கள் ஒற்றுமையுடனும், விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும். இப்பொழுது நடக்கும் வன்முறை மனதுக்கு வேதனை அளிக்கிறது என பதிவிட்டிருந்தார்.

இதற்கு சீமான், பிரச்சினைகளுக்கு வன்முறை தீர்வாகாதுதான்! வன்முறை செய்தது யார்? குடியுரிமைச் சட்டத்திருத்தம் பற்றிய‌ உங்களது கருத்தென்ன? ஏற்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? அதைச் சொல்லுங்கள் முதலில் அடக்குமுறையையும், ஒடுக்குமுறையையும் மீறி போராடும் மாணவர்களை இதைவிட யாராலும் கொச்சைப்படுத்த முடியாது என பதிலடி கொடுத்துள்ளார்.


  


Advertisement