இந்தியா

தலித் இளைஞரை சிறுநீர் குடிக்க வற்புறுத்திய கொடூரம்.. ராஜஸ்தானில் பெரும் சோகம்.!

Summary:

தலித் இளைஞரை சிறுநீர் குடிக்க வற்புறுத்திய கொடூரம்.. ராஜஸ்தானில் பெரும் சோகம்.!

இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ருக்காசர் கிராமத்தை சேர்ந்த தலித் இளைஞர் ராகேஷ் மேக்வால். இவர் கடந்த 27 ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில், "முன்விரோத பிரச்சனையில் தன்னை சிலர் வீட்டில் இருந்து கடத்தி சென்று, வயல் வெளியில் மதுபானம் குடிக்க வற்புறுத்தினர். 

அதற்கு மறுப்பு தெரிவித்த என்னை, மதுபாட்டிலில் சிறுநீர் கழித்து வாய்க்குள் வலிகட்டாயமாக ஊற்றி விட்டனர். என் சமுதாயம் குறித்து அவதூறாக பேசி, என்னை தாக்கினர்" என்று தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், 8 பேரின் மீது வழக்குப்பதிவு செய்து தற்போது வரை 2 பேரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள 6 பேருக்கு அதிகாரிகள் வீசப்பட்டுள்ளது.


Advertisement