கட்டிட இடிப்பு பணியில் பரிதாபம்.. நொடியில் நிகழ்ந்த விபத்து.. பதைபதைப்பு வீடியோ.!

கட்டிட இடிப்பு பணியில் பரிதாபம்.. நொடியில் நிகழ்ந்த விபத்து.. பதைபதைப்பு வீடியோ.!


Rajasthan Building Demolish Action Accident Driver Govt Injured

ஆக்கிரமிப்பில் கட்டப்பட்ட கட்டிடம் இடிக்கும் பணியின் போது நிகழ்ந்த விபத்தில் ஓட்டுநர் காயம் அடைந்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிவாடி பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தில் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்துள்ளது. இதனை கவனித்த அதிகாரிகள், வீட்டின் உரிமையாளரை எச்சரித்து கட்டிடத்தை அகற்ற சம்மன் வழங்கியுள்ளனர். 

ஆனால், இதனை கண்டுகொள்ளாத வீட்டின் உரிமையாளர் தொடர்ந்து கட்டிடம் கட்டுவதில் முனைப்புடன் இருந்ததால், வீட்டினை இடித்து அகற்ற அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். நேற்று காவல் துறையினர் பாதுகாப்புடன், ஜெ.சி.பி இயந்திரம் மூலமாக வீடு இடிக்கும் பணி நடைபெற்றது. 

அப்போது, பளு தூக்கும் இயந்திரமானது வீட்டினை கீழே தள்ளும் முயற்சியில் ஈடுபட்டபோது எதிர்பாராத விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் பளுதூக்கும் இயந்திரத்தை இயக்கிய ஓட்டுநர் காயம் அடைந்தார். அவரை மீட்ட அதிகாரிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.