13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
சாலை தடுப்பில் மோதி விபத்திற்குள்ளான கார்: 3 பேர் உயிருடன் எரிந்து உடல் கருகி பலி.!
இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் பகுதியில், நேற்று நள்ளிரவு நேரத்தில் கார் ஒன்று பயணம் செய்தது. அதிவேகமாக பயணித்த கார், திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பின் மீது மோதி விபத்திற்குள்ளாகியது.
இந்த விபத்தில் கார் தீப்பற்றி எரிந்துவிடவே, காரில் பயணம் செய்த 3 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்த பின்னரே, காருக்குள் உயிருடன் மூவர் உடல் கருகி பலியான சம்பவம் தெரியவந்தது. இவர்களின் உடலை மீட்ட அதிகாரிகள், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த மூவர் அப்பகுதியை சேர்ந்த சோஹைல் கான், ஜெய் சங்கலா, சக்தி சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பிற 2 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இரவு நேர பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய இருசக்கர வாகன ஓட்டி, சாலையில் கார் எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளூர் மக்களுடன் சேர்ந்து 2 பேரை படுகாயத்துடன் மீட்டு இருக்கிறார்.
காரில் கேஸ் எரிவாயு பயன்படுத்தப்பட்டதால், விபத்தில் சிக்கியதும் எரிவாயு இணைப்பில் பிரச்சனை ஏற்பட்டு தீப்பிடித்தது தெரியவந்தது.
VIDEO | Three people died after a car hit a divider and caught fire in Rajasthan's Ajmer. pic.twitter.com/yckFIC5IiR
— Press Trust of India (@PTI_News) December 17, 2023