இந்தியா

திக் திக் நிமிடங்கள், நொடிப்பொழுதில் ஒரு மனிதரின் உயிரை காத்த ரயில்வே ஊழியர் - வீடியோ உள்ளே!

Summary:

railway worker help to third person

இன்று குடிபோதைக்கு அடிமையாகி பலர் தங்கள் உயிரை இழக்கின்றனர்.ஏன் இன்னும் சிலரது குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் எப்போதும் இருந்து வருகின்றன. இதற்கெல்லாம் முக்கிய காரணம் குடிக்கு அடிமையாவது தான்.

அதுபோல் இங்கு ஒரு இளைஞர் நன்கு குடித்துவிட்டு சைக்கிளுடன் தண்டவாளத்தை கடக்க முயற்சிக்கின்றார்.அப்போது நிலை தடுமாறி சைக்கிளுடன் கீழே விழுகின்றார். மீண்டும் எழுந்து சைக்கிளை தண்டவாளத்தில் இருந்து வெளியேறியவர் பின்னால் வரும் ரயிலை கண்டுகொள்ளாமல் நின்றுள்ளார்.

அப்போது நொடிப் பொழுது அங்கு வேலை செய்து கொண்டிருந்த ரயில்வே ஊழியர் ஒருவர் ஓடிவந்து அந்த நபரை காப்பாற்றுகிறார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலரும் அந்த ரயில்வே ஊழியருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 


Advertisement