#BigNews: பஞ்சாபில் அரசியல் கொலை?.. இந்தியாவையே அதிரவைத்த சர்ச்சை பஞ்சாபி பாடகர் பட்டப்பகலில் சுட்டுக்கொலை..!

#BigNews: பஞ்சாபில் அரசியல் கொலை?.. இந்தியாவையே அதிரவைத்த சர்ச்சை பஞ்சாபி பாடகர் பட்டப்பகலில் சுட்டுக்கொலை..!



punjab-singer-sidhu-moosewala-shot-dead

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மான்சா மாவட்டம், ஜவஹர்கே கிராமத்தில் பஞ்சாபின் புகழ்பெற்ற பாடகர் சித்து மூஸ்வாலா சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மான்சா தொகுதியில் வேட்பாளராக களமிறங்கி இருந்தார். ஆனால், அவர் ஆம் ஆத்மீ வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார். 

கடந்த மாதத்தில் சித்து மூஸ்வாலா "பலி ஆடு" என்ற அரசுக்கு எதிரான சர்ச்சைக்குரிய பாடலை பாடியதாகவும், இதனால் ஆளும் ஆம் ஆத்மீ தொண்டர்கள் அவரின் மீது ஆத்திரத்தில் இருந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனாலேயே அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். 

பக்வத்மான் தலைமையிலான பஞ்சாப் ஆம் ஆத்மீ சமீபத்தில் 400 க்கும் மேற்பட்ட அரசியல் புள்ளிகளுக்கு வழங்கியிருந்த காவலர் பாதுகாப்பை திரும்ப பெற்றுக்கொண்ட நிலையில், அதில் சித்து மூஸ்வாலாவும் ஒருவர். அதனைதொடர்ந்தே, இந்த படுகொலை நடந்துள்ளது. இதனால் பஞ்சாபில் கலவர சூழலும் உருவாகியுள்ளது. 

மேற்படி பிரச்சனை நடக்காமல் இருக்க அரசு தேவையான நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இந்த கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் பகவத் மான், குற்றவாளிகளை கைது செய்து தண்டனை பெற்று தருவோம் என்றும் தெரிவித்துள்ளார். சித்து மூஸ்வாலா சர்ச்சைக்குரிய பஞ்சாபி பாடகராகவும், துப்பாக்கி கலாச்சாரத்தை வெளிப்படையாக ஊக்குவிக்கும் நபராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.