வழிப்பறி கொள்ளையர்களுக்கு இரும்பு ராடால் பாடம் புகட்டிய இளைஞர்: ஐயோ., அம்மா கதறல் சம்பவம்.. வைரல் வீடியோ..!

வழிப்பறி கொள்ளையர்களுக்கு இரும்பு ராடால் பாடம் புகட்டிய இளைஞர்: ஐயோ., அம்மா கதறல் சம்பவம்.. வைரல் வீடியோ..!


Punjab Man Teach a Lesson to Snatchers 

 

பஞ்சாப் மாநிலத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவர், கடந்த 2 நாட்களுக்கு முன், நள்ளிரவு 11:48 மணியளவில் தனது வீட்டின் வாசலில், சாலையில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். 

அச்சமயம், அங்கு வந்த மூன்று பேர் கும்பல் இளைஞரை கத்தி முனையில் மிரட்டி, அவரின் செல்போனை பற்றி செல்ல முயற்சித்துள்ளது. ஆனால், அங்கு திருடர்களை திணறவைக்கும் சம்பவம் நடந்தது. 

இளைஞர் திருட்டு கும்பலை சேர்ந்த மூவரையும் புரட்டி எடுத்த நிலையில், அவர்கள் கத்தி முனையில் தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளனர். சுதாரித்த இளைஞர் தனது காரில் இருந்த இரும்பு ராடை எடுத்து வந்து, கயவர்கள் மூவரையும் வெளுத்து வாங்கி இருக்கிறார். 

இந்த நிகழ்வுகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அடி தாங்க முடியாத அல்லக்கைகள் மூவரும், அவரிடம் வாக்குவாதம் செய்து, பின் சமாதான முயற்சியில் ஈடுபட்டு சென்றதாக தெரிய வருகிறது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.