ஆட்சியில் இருக்கும்போது 32 வயது மருத்துவரை 2வது திருமணம் செய்த முதல்வர்.! நேரில் சென்று வாழ்த்திய அரவிந்த் கெஜ்ரிவால்.!

ஆட்சியில் இருக்கும்போது 32 வயது மருத்துவரை 2வது திருமணம் செய்த முதல்வர்.! நேரில் சென்று வாழ்த்திய அரவிந்த் கெஜ்ரிவால்.!punjab-chief-minister-got-second-marriage

சமீபத்தில் நடந்து முடிந்த பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக பக்வந்த் மான் என்பவர் போட்டியிட்டார். பின் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து  பக்வந்த் மான் பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றார். இந்நிலையில் 48 வயது நிறைந்த முதல்வர் பக்வந்த் மான்க்கும், 32  வயது நிறைந்த மருத்துவர் குா்பிரீத் சிங் என்பவருக்கும் இன்று சீக்கிய பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது .

இது  அவருக்கு இரண்டாவது திருமணமாகும். அவரது முதல் மனைவி இந்தா்பிரீத் கவுர். 2015 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இந்தா்பிரீத் கவுர் தற்போது  அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவர்களுக்கு 21 வயதில் ஒரு மகளும், 17 வயதில் மகனும் உள்ளனா். கடந்த மாா்ச் மாதம் பஞ்சாப் முதல் மந்திரியாக பகவந்த் மான் பதவியேற்றபோது அந்த நிகழ்ச்சியில் பிள்ளைகள் இருவரும் கலந்து கொண்டுள்ளனர்.

punjab

இந்நிலையில், முதல்வர் பகவந்த் மான் மருத்துவர் குா்பிரீத் சிங்கை சண்டீகரில் உள்ள தனது இல்லத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் மிகவும் எளிமையாக இன்று திருமணம் செய்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரும் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

punjab