
punjab amirthasaras siddhu
தசரா பண்டிகை கொண்டாட்டத்தின்போது நிகழ்ந்த ரயில் விபத்தில் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளை தத்தெடுத்த தயாராக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மாநில சுற்றுலாத் துறை அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து கூறியுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடந்த தசரா பண்டிகையின் போது நிகழ்ந்த ரயில் விபத்தில் 61 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்,
ராவணன் உருவ பொம்மை எரிப்பு நிகழ்ச்சியை காண திரளான மக்கள் கூடி இருந்ததாகவும் இடநெருக்கடியால் அருகில் இருந்த ரயில் தண்டவாளத்தில் நின்று நிகழ்ச்சியை காணும்போது வந்து கொண்டிருந்த ரயில் மோதியது என்று தெரியவந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில் சித்துவும் அவருடைய மனைவியும் சேர்ந்து இந்த விபத்தில் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளை தத்தெடுக்க முடிவு செய்வதாக அறிவித்துள்ளனர். மேலும் கணவர்மார்களை இழந்து தவிக்கும் பெண்களுக்கும் பொருளாதாரரீதியாக உதவி செய்வதாகவும் அறிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement