TVK Vijay: விஜய்க்கு அனுமதி கொடுத்த புதுச்சேரி அரசு.. அதிகாரப்பூர்வ உத்தரவு.!



Puducherry Government Denies Vijay’s Roadshow, Grants Permission for Public Meeting

TVK Vijay Puducherry: புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ செல்ல அனுமதி இல்லை. ஆனால், பொதுக்கூட்டம் நடத்திக்கொள்ளலாம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 2026ல் தவெக ஆட்சியை ஏற்படுத்த தீவிர களப்பணிகளுக்கு திட்டமிட்டு இருக்கிறார். தற்போது, அரசியல் அனுபவம் கொண்ட கே.ஏ. செங்கோட்டையனும் அவருடன் கைகோர்த்து இருப்பதால், தவெகவின் களப்பணிகள் விறுவிறுப்பு அடைந்துள்ளன.

தவெக கோரிக்கை:

புதுச்சேரி மாநிலத்தில் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ நடத்தி பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் என பல இடங்களில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரடியாக சென்று மனு வழங்கி இருந்தார்.

இதையும் படிங்க: BREAKING: சற்று முன்.. தவெக தலைவர் விஜயை நேரில் சந்தித்த செங்கோட்டையன்! நொடிக்கு நொடி அடுத்தக்கட்ட அரசியல் மூவ்!

TVK Vijay

அரசு ஆய்வு கூட்டம்:

இதுதொடர்பாக அம்மாநில அரசு பரிசீலனை செய்து வந்த நிலையில், இன்று (டிச.02) புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காவல்துறை இயக்குனர் உட்பட மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தவெகவுக்கு அனுமதி:

இந்த கூட்டம் நிறைவுபெற்றதும் அம்மாநில டிஐஜி சத்திய சுந்தரம், "புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ நடத்த அனுமதி கிடையாது. பொதுக்கூட்டம் நடத்திக்கொள்ள அனுமதி உண்டு" என அறிவித்துள்ளார். இதன் வாயிலாக ரோடு ஷோக்கு அனுமதி கொடுக்க மறுத்த புதுச்சேரி மாநில அரசு, பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்கி இருக்கிறது.

இதையும் படிங்க: BREAKING : சற்று முன்.... தவெக தலைவர் விஜய்க்கு ஷாக்! புதுச்சேரி ரோடு ஷோ