
புதுச்சேரியில் 3 பேருக்கு ஒமிக்ரான் உறுதி.. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை?..! பகீர் செய்தியால் மக்கள் பதற்றம்.!!
புதுச்சேரி மாநிலத்தில் சமீபகாலமாகவே சமூகவலைத்தளத்தில் பல்வேறு அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் பரவி வருகிறது. கடந்த மாதத்தின் போது மழை பெய்து வருகையில், அதிகாரி ஒருவரின் பெயரில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக தகவல் பரப்பப்பட்டது.
இந்த விஷயம் தொடர்பாக அம்மாநில பள்ளிக்கல்வித்துறை சார்பில் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இந்த நிலையில், நேற்று முன்தினம் புதுச்சேரி மாநிலத்தில் 3 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸின் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுத்தாக போலியான தகவல் வெளியானது.
மேலும், பிரபல தனியார் ஊடகம் இச்செய்தியை வெளியிட்டது போல தகவல் பரப்பப்பட்டது. பின்னர், இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்கையில், அது பொய்யான தகவல் என்பது உறுதியானது. இதனால் பொதுமக்களும், மாணவர்களும் பெரும் இன்னலுக்கு உள்ளாகினர். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்களை அதிகாரிகள் விரைந்து கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement