தமிழ் சங்கத்திற்கு தமிழ் நாட்டிலேயே எதிர்ப்பு!.. ரயில் மறியலில் ஈடுபட்ட SFI அமைப்பினர் அதிரடி கைது..!

தமிழ் சங்கத்திற்கு தமிழ் நாட்டிலேயே எதிர்ப்பு!.. ரயில் மறியலில் ஈடுபட்ட SFI அமைப்பினர் அதிரடி கைது..!



Protesting the participation of Tamil Nadu students in the Tamil Sangam event in Kashi, the Indian Students' Association staged a train strike

காசியில் நடைபெறும் தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழக மாணவர்கள் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து, இந்திய மாணவர் சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டம் நடத்த சென்றனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். 

காசியில், காசி தமிழ் சங்கமும் என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது. தமிழக கலை, இலக்கிய, கலாச்சாரம், மொழி பரிமாற்றம் குறித்து நடத்தப்படும் நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பலதரப்பினரும் காசிக்கு சென்றுள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து வாரம் ஒருமுறை காசிக்கு செல்லும் ரயிலில் அழைத்து செல்லப்படும் இவர்கள், காசியில் நான்கு நாட்கள் தங்கி நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்புகின்றனர்.

டிசம்பர் 15-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், தமிழக மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரத்தில் நேற்று இந்திய மாணவர் சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். மாணவர் சங்கத்தினர், மாணவர் சங்க மாநில குழு உறுப்பினர் வில்லியம் ஜாய்சி தலைமையில், ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு மறியலுக்கு சென்றனர்.

தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தமிழக மாணவர்களுக்கு ஆர்எஸ்எஸ் பயிற்சி அளிக்கப்படுவதாக கூறி, தமிழக மாணவர்கள் அழைத்து செல்லப்படுவதை கண்டித்து கோஷம் எழுப்பியபடி ரயில் நிலைய வளாகத்திற்குள் செல்ல முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், சங்க மாநில துணைத்தலைவர் சம்சீர் அகமது உள்ளிட்ட 16 பேரை கைது செய்தனர்.