AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
"ரூல்ஸை சொன்னது குத்தமாயா..." பேராசிரியருக்கு கத்திக்குத்து.!! எம்.டெக் மாணவர் கைது.!!
ஆந்திர மாநிலத்தில் தேர்வெழுத அனுமதி மறுத்ததால் பேராசிரியர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக எம்.டெக் முதலாமாண்டு படித்து வரும் மாணவரை கைது செய்துள்ள காவல் துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தின் விஜயநகர் பகுதியைச் சேர்ந்தவர் விநாயக் புருஷோத்தமன். இவர் அந்தப் பகுதியில் அமைந்துள்ள பொறியியல் கல்லூரியில் எம்.டெக் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் தேர்வு நடைபெறுவதை தொடர்ந்து தேர்வு எழுதுவதற்காக கல்லூரிக்கு சென்றிருக்கிறார் புருஷோத்தமன். அப்போது தேர்வின் மேற்பார்வையாளராக இருந்த பேராசிரியர் கோபால் ராஜ் புருஷோத்தமனை தேர்வெழுத அனுமதிக்கவில்லை.

அவரது வருகை பதிவு சீராக இல்லாததால் தேர்வெழுத அனுமதிக்க முடியாது எனக்கூறி அறையிலிருந்து வெளியேறுமாறு தெரிவித்திருக்கிறார். மேலும் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என்றால் அவரது துறை தலைவரின் ஒப்புதல் வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார். ஆனால் புருஷோத்தமன் தன்னை தேர்வெழுத அனுமதிக்குமாறு பேராசிரியரை வற்புறுத்தியதால் காவலாளியை அழைத்து புருஷோத்தமனை தேர்வறையிலிருந்து வெளியேற்றுமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அட கொடுமையே... செல்போனை பிடுங்கியாதால் ஆத்திரம்.!! ஆசிரியருக்கு கத்திக்குத்து.!!
இதனால் ஆத்திரமடைந்த புருஷோத்தமன் மறைத்து வைத்திருந்த கத்தியால் பேராசிரியரை சரமாரியாக தாக்கியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து அருகிலிருந்த மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் புருஷோத்தமனை தடுத்துள்ளனர். மேலும் காயமடைந்த பேராசிரியரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக காவல்துறைக்கு புகார்ளிக்கப்பட்ட நிலையில் கல்லூரிக்கு வந்த போலீசார் பேராசிரியரை தாக்கிய புருஷோத்தமனை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி வளாகத்தில் பேராசிரியர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: அண்ணியுடன் முறை தவறிய காதல்... இளைஞர் படுகொலை.!! அண்ணன் கைது.!!