108 அடி உயர அனுமன் சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி - ஒரே பாரதம் என பேச்சு.!

108 அடி உயர அனுமன் சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி - ஒரே பாரதம் என பேச்சு.!


Prime Minister Narendra Modi Open Hanuman Statue Gujarat

இந்தியாவின் 4 திசையிலும் 4 ஹனுமன் சிலைகள் விரைவில் திறக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார். 

குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி நகரில் 108 அடி உயர அனுமன் சிலையை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து அவர் பேசுகையில், "Hanumanji4dham திட்டத்தின் கீழ், 4 திசைகளில் ஹனுமன் சிலைகள் திறக்கப்படும். அதில், ஒன்று சிம்லாவில் இருக்கிறது. 

Prime minister

இரண்டாவது குஜராத்தில் திறக்கப்பட்டுள்ளது. பிற 2 சிலைகள் மேற்கு வங்கம் மற்றும் ராமேஸ்வரத்தில் நிறுவப்படும். Hanumanji4dham என்பது அவரின் சிலைகளை நிறுவுவது மட்டுமல்லாது. ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டத்தின் ஒரு பகுதியாகும்" என்று தெரிவித்தார்.