கியாஸ் சிலிண்டர் விலை குறைப்பால் சகோதரிகளின் வாழ்க்கை மேம்படும்: பிரதமர் மோடி பெருமிதம்..!!

கியாஸ் சிலிண்டர் விலை குறைப்பால் சகோதரிகளின் வாழ்க்கை மேம்படும்: பிரதமர் மோடி பெருமிதம்..!!



Prime Minister Modi said that the reduction in cooking gas cylinder prices will make life easier for my sisters.

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை குறைப்பு எனது சகோதரிகளின் வாழ்க்கையை எளிதாக்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர்களின் மாதந்தோறும் உயர்ந்து வந்த நிலையில், அதன் விலையில் ரூ.200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு கியாஸ் சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.400 குறைக்கப்படுவதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னையில் தற்போது வீட்டுஉபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.1,118.50 க்கு விற்கப்பட்டு வந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் போது, வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை மட்டும் குறைக்கப்பட்டது. ஆனால், வீட்டு உபயோக சிலிண்டரின் விலை மட்டும் குறைக்கப்படவில்லை.

இந்த நிலையில், நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறைப்பு முடிவு எடுக்கப்பட்டது. இந்த விலை குறைப்பு இன்று முதல் (ஆகஸ்ட் 30) அமலுக்கு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வீட்டு உபயோக சமையல் கியாஸ் விலை குறைப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள பிரதமர் மோடி, ரக்ஷா பந்தன் பண்டிகை நம் குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும் நாள். எரிவாயு விலை குறைப்பு எனது குடும்பத்தில் உள்ள சகோதரிகளின் வசதியை அதிகரித்து அவர்களின் வாழ்க்கையை எளிதாக்கும்.

என்னுடைய ஒவ்வொரு சகோதரியும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், இதுவே கடவுளின் என் விருப்பம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது