இந்தியா

செம மாஸ்தான்! அழகிய மணமகளின் அசத்தலான என்ட்ரி.! திகைத்து பார்த்த உறவினர்கள்.! வைரல் வீடியோ..

Summary:

செம மாஸ்தான்! அழகிய மணமகளின் அசத்தலான என்ட்ரி.! திகைத்து பார்த்த உறவினர்கள்.! வைரல் வீடியோ..

தற்காலத்தில் திருமணங்கள் பலவும் யாரும் மறக்க முடியாத வகையில், மிகவும் வித்தியாசமாகவும், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் தடபுடலாக இருக்க வேண்டும் என்பது பலரது கனவு. அதற்காக பல வினோதமான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றது. அவற்றில் சில வேடிக்கையாகவும், சில ஆச்சரியமூட்டி பாராட்டும் வகையிலும் அமையும்.

அதிலும் திருமணத்தில் மணமகன், மணமகள் என்ட்ரி மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் மணமகள் ஒருவர் திருமணத்தில் டிராக்டரில் செம மாஸாக என்ட்ரி கொடுத்த வீடியோ இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.

மத்தியப் பிரதேசத்தின் பெட்டூலில்  அண்மையில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணமகள் திருமண மண்டபத்திற்கு ஃபுல் மேக்கப்பில் கூலிங் கிளாஸ் அணிந்து செம  மாஸாக டிராக்டரில் என்ட்ரி கொடுத்துள்ளார். மேலும் அப்பொழுது அவரது இரு சகோதரர்களும் இருபுறங்களிலும் நின்றுள்ளனர். அந்த மணமகள் பொறியியலாளராக பணிபுரிகிறார் எனக் கூறப்படுகிறது. இந்த வீடியோ வைரலாகி அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement