
Prepaid validity date
இந்தியாவில் கொரோன வைரஸ் அதிக அளவில் பரவி வரும் நிலையில் அனைத்து மக்களும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என கூறி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் பிரதமர் மோடி. இதனால் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு விட்டன.
மேலும் நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளிலேயே இருந்து வருகின்றனர். இதனால் மொபைல் போனில் வேலிடிட்டி காலத்தை அதிகரிக்க வேண்டும் என தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியா முழுவதும் 21 நாட்கள் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் ரீசார்ஜ் கடைகள் அனைத்தும் அடைப்பட்டுவிட்டன. இதனால் சாதாரண மனிதர்கள் ரீசார்ஜ் செய்ய முடியாமல் போகிறது. அதனால் வேலிடிட்டி காலத்தை அதிகரிக்க வேண்டும் என டிராய் இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதனால் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது வேலிடிட்டிகான காலத்தை நீட்டிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement