இளைஞரின் வாழ்க்கையை சீரழித்த பெண்ணுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை; காரணம் என்ன?..!



UP WOmen Sentenced Jail false Rape case 

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் வசித்து வந்த 21 வயது பெண்மணி, கடந்த 2019 ம் ஆண்டு 25 வயதுடைய இளைஞர் தன்னை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞர் சிறையில் அடைக்கப்பட்டார். 

செய்யாத குற்றத்திற்கு 4.6 ஆண்டுகள் சிறை:

வழக்கு விசாரணையின்போது, பாதிக்கப்பட்டதாக கூறிய பெண்மணி அளித்த விபரங்கள் அனைத்தும் பொய் என்பது தெரியவந்தது. இதற்குள் 4 ஆண்டுகள் 6 மாதங்கள் 8 நாட்கள் கடந்துவிட்டன. இவ்வுளவு நாட்களையும் சிறையில் கடந்த இளைஞர், ஏப்ரல் 8ல் விடுதலை செய்யப்பட்டார். பெண்ணிடம் நீதிபதிகள் விசாரித்தபோது, பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட பெண்மணி இளைஞரை வழக்கில் சிக்க வைக்க நாடகமாடியது உறுதியானது. 

பெண்ணுக்கு வழங்கப்பட்ட அதிரடி தண்டனை:

இதனையடுத்து, இன்று வழக்கின் இறுதி தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள், பொய்யுரைத்து இளைஞரின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய பெண்ணுக்கு, அவர் சிறையில் இருந்த அதே நாட்கள் தண்டனையை தீர்ப்பாக வழங்கினர். அதன்படி, பெண்மணி 4 ஆண்டுகள் 6 மாதங்கள் 8 நாட்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்.

அவரிடம் இருந்து ரூ.5,88,822 அபராதமாக வசூலித்து இளைஞரிடம் கொடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.