இந்தியா Covid-19

கர்ப்பிணி பெண்ணையும் விட்டு வைக்காத கொரோனா..! கேரளாவில் கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி.!

Summary:

Pregnant woman test positive in Kerala

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கேரளாவை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவது பெரும் அச்சத்தை ஏற்படுத்திவருகிறது. கொரோனாவால் இதுவரை 47 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிர் இழந்துவிட்டனர். இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

இந்நிலையில், கேரளாவில் இன்று 21 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணும் ஒருவர் என அம்மாநில முதலவர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் கேரளாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 286ஆக உயர்ந்துள்ளது.


Advertisement