படத்தில் தான் வில்லன்; நிஜ வாழ்க்கையில் ரியல் ஹீரோவான பிரகாஷ்ராஜ் - குவியும் பாராட்டுக்கள்!

Prakshraj ready to get loan to serve people


prakshraj-ready-to-get-loan-to-serve-people

பிரபல வில்லன் நடிகரான பிரகாஷ்ராஜ் மக்களின் இந்த இக்கட்டான சூழ்நிலையில் வங்கியில் கடன் பெற்றும் உதவி செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் லாக்டவுனில் இருப்பதால் சிறு குறு தொழில் மற்றும் தினக்கூலி வருமானத்தை நம்பி வாழ்ந்தவர்களின் வருமானம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்டவர்களுக்கு அரசு மற்றும் சில தனியார் நிறுவனங்கள் தங்களால் முயன்ற உதவிகளை செய்து வருகின்றன.

Prakashraj

குறிப்பாக நடிகர் பிரகாஷ்ராஜ் தன்னிடம் வேலை செய்யும் ஊழியர்களுக்கு ஏற்கனவே மூன்று மாத சம்பளத்தை முன்பணமாக கொடுத்துள்ளார். மேலும் சினிமா துறையில் பணியாற்றும் பல ஏழை குடும்பங்களுக்கு உதவி செய்து வருகிறார்.

தற்போது ட்விட்டரில் பிரகாஷ்ராஜ் பதிவிட்டுள்ள ஒரு தகவல் பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளது. இதற்கு காரணம் அவருடைய இருப்பு குறைந்து வருகிறதாம். ஒருவேளை அவரிடம் இருக்கும் பணம் காலியாகிவிட்டாலும் வங்கியில் கடன் பெற்றாவது உதவிகளை தொடர்ந்து செய்வேன் என கூறியுள்ளார்.

மேலும் "இந்த இக்கட்டான சூழ்நிலையில் மனிதநேயம் வென்றுவிட்டால் என்னால் நிச்சயம் மீண்டும் சம்பாதித்து கடனை அடைத்துவிட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே அனைவரும் இணைந்து போராடுவோம்; மீண்டும் புதுவாழ்வு பெறுவோம்" என பதிவிட்டுள்ளார்.