இந்தியா

200 ரூபாய் லாட்டரி ஷீட்டு..! கூலி வேலை பார்த்துவந்த ஏழை குடும்பத்திற்கு கோடி கணக்கில் அடித்த அதிர்ஷ்டம்..! குவியும் வாழ்த்துக்கள்..!

Summary:

200 ரூபாய்க்கு கூலி வேலை பார்த்துவந்த ஏழை குடும்பத்திற்கு கோடி கணக்கில் அடித்த அதிர்ஷ்டம்!.

பஞ்சாப் மாநிலத்தில் கூலித்தொழிலாளியான மனோஜ் குமார்- ராஜ்கவுர் தம்பதியினர் செங்கல் சூளையில் கூலி வேலைக்கு சென்று வந்தனர். இவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் கஷ்டப்பட்டு அவர்களது வாழ்க்கையை நடத்திவந்தனர்.

இவர்களுக்கு ஒரு செங்கலுக்கு 50 பைசா வீதம் கூலியாக வழங்கப்பட்டது. நாள் முழுவதும் கடினமாக உழைத்தாலும் அதிகபட்சமாக 250 ரூபாய் கிடைக்கும். இந்த பணத்தை வைத்தே இவர்கள் 3 பெண் பிள்ளைகளையும் வளர்த்து வந்துள்ளனர்.

ஏழ்மை நிலையில் வாழ்ந்து வந்த மனோஜ்குமாருக்கு லாட்டரி சீட்டு  வாங்கும் பழக்கம் மனோஜ் குமாருக்கு கிடையாது. இந்த நிலையில், ராக்கி பம்பர் லாட்டரி பற்றி கேள்விப்பட்டதும் திடீரென தன்னுடன் வேலை செய்யும் இன்னொரு நண்பரிடம் இருந்து ரூ.200 கடன் வாங்கி ஒரு லாட்டரி சீட்டு வாங்கியுள்ளார்.

மனோஜ் வாங்கிய லாட்டரிக்கு 1.5 கோடி ரூபாய் பரிசு கிடைத்து. இந்த சம்பவம் அறிந்த மனோஜ்குமாரின் ஒட்டுமொத்த  குடும்பமும் தற்போது மகிழ்ச்சிக்கடலில் மூழ்கி உள்ளது. வறுமையில் கஷ்டப்பட்டு கொண்டிருந்த ஏழை கூலி தொழிலாளிக்கு கிடைத்த அதிர்ஷ்டம் தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.


Advertisement