தேர்தலில் வெற்றி பெற்ற கூலித்தொழிலாளியின் மகள்! அவர் எப்படி வேட்பாளர் ஆனார் தெரியுமா?

தேர்தலில் வெற்றி பெற்ற கூலித்தொழிலாளியின் மகள்! அவர் எப்படி வேட்பாளர் ஆனார் தெரியுமா?


poor family girl won in election

இந்திய நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளில் வேலூர் தொகுதியை தவிர 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், காலியாக இருக்கும் 22 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று (மே 23) நாடு முழுவதும் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது. இதுவரை வெளிவந்துள்ள முடிவுகளின் படி பாஜக கூட்டணி 350 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 92, மற்றவை 100 இடங்களில் பெரும்பான்மை பெற்றுள்ளன. 

கேரள மாநிலத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகளான ரம்யா ஹரிதாஸ், அலத்தூர் தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டார். கடந்த 6 வருடங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் சார்பில் டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியுள்ளார்  ரம்யா ஹரிதாஸ்.

Election 2019

அந்த நிகழ்ச்சியில் இவருடைய திறமையை பார்த்து ஆச்சரியமடைந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, ரம்யாவை தன்னுடைய கட்சியில் உறுப்பினராக இணைத்துக்கொண்டார். பாடல் மற்றும் நாடக கலைஞரான ரம்யா எளிதாக அப்பகுதியை சேர்ந்த மக்களிடையே பிரபலமடைந்துள்ளார். இது அப்பகுதியை சேர்ந்த இடதுசாரி கட்சியினருக்கு தலைவலி கொடுக்க ஆரம்பித்தது. ஐதனையடுத்து அவர் மீது பாலியல் ரீதியிலான புகார்களை எதிர்க்கட்சியினர் திணிக்க ஆரம்பித்துள்ளனர்.

ஆனால் அவற்றை எல்லாம் தாண்டி அலத்தூர் தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் ரம்யா போட்டியிட்டார். அத்தொகுதியில் அசைக்க முடியாத வேட்பாளராக திகழ்ந்த இடதுசாரி கட்சியின் P.K. பிஜு-வை, 5,33,815 வாக்குகள் பெற்று தோற்கடித்துள்ளார்.