இந்தியா வீடியோ

பாலுக்காக அழுத 4 மாத குழந்தை! பசியை போக்க மின்னல்வேகத்தில் பாய்ந்து காவலர் செய்த அசத்தல் காரியம்! குவியும் வாழ்த்துக்கள்!

Summary:

Policemat Man ran fast to buy a milk for 4 month baby

கர்நாடக மாநிலம் பெல்காமில் இருந்து உத்தர பிரதேசம் மாநிலம் கோரக்பூருக்கு கடந்த மாத இறுதியில் சிறப்பு ரயில் ஒன்று புறப்பட்டது. அந்த ரயிலில் ஹசீன் ஹாஷ்மி என்பவர் அவரது மனைவி ஷரிஃப் ஹாஷ்மி மற்றும் தங்களது நான்கு மாத குழந்தையுடன் பயணித்துள்ளார். அப்பொழுது ரயிலில் ஹசீன் ஹாஷ்மியின் குழந்தை பசியால் அழுதுகொண்டே இருந்துள்ளது. இந்நிலையில் அவர்கள் பல ரயில் நிலையங்களிலும் குழந்தைக்கு பால் வாங்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் எங்குமே பால் கிடைக்கவில்லை.

இந்நிலையில் ரயில் மத்திய பிரதேச மாநிலம் போபால் ரயில் நிலையத்தை அடைந்த நிலையில்,  அவர்கள் இங்கு எப்படியாவது பால் வாங்கிவிட வேண்டும் என முயற்சி செய்துள்ளனர். ஆனால் ரயில் நிலையத்தில் பால் விற்கபடவில்லை. மேலும் அங்கு 10 நிமிடங்கள் மட்டுமே ரயில் நிற்கும்.
இந்தநிலையில் அவர்கள் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த ஆர்பிஎஃப் காவலர் இந்தர் சிங் யாதவிடம், தங்களது குழந்தையின் நிலைமையை கூறி உதவி கேட்டுள்ளனர். 

உடனே குழந்தைக்கு எப்படியாவது பால் வாங்கிக் கொடுக்க வேண்டும் என எண்ணிய அவர் உடனே ரயில் நிலையத்திற்கு வெளியே சென்று பாக்கெட்டில் பால் வாங்கியுள்ளார். பின்னர் அதனை கொடுப்பதற்கு ரயில் நிலையத்திற்குள் நுழைந்த நிலையில் ரயில் புறப்பட்டு வேகமெடுத்தது. ஆனாலும் அவர் சற்றும் யோசிக்காமல் மின்னல் வேகத்தில் ஓடிச்சென்று ஹசீன் ஹாஷ்மியிடம் குழந்தைக்கு வாங்கிய பாலை கொடுத்துள்ளார். இந்நிலையில் அந்த தம்பதியினர் கண்கலங்க அவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து இதுகுறித்த சிசிடிவி வீடியோக்கள்  சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் நெட்டிசன்கள்,  ரயில்வே அதிகாரிகள் என பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறியுள்ளனர். மேலும் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் காவலர் இந்தர் சிங் யாதவை பாராட்டியதோடு அவருக்கு சன்மானம் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.


Advertisement