வேலை நேரத்தில் போலீஸ் ஸ்டேஷனை மினிபாராக மாற்றி... மது குடித்த போலீசார்.‌.. பரபரப்பு வீடியோ..!

வேலை நேரத்தில் போலீஸ் ஸ்டேஷனை மினிபாராக மாற்றி... மது குடித்த போலீசார்.‌.. பரபரப்பு வீடியோ..!


Police station turned into a mini bar during working hours... drunk policemen... sensational video..!

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் மூன்று பேர் காவல் நிலையத்தில் அமர்ந்து மது குடித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோலார் மாவட்டம் ஸ்ரீனிவாஸ்பூர் தாலுகாவில் இருக்கும் கவுனிபள்ளி போலீஸ் ஸ்டேஷனில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கான்ஸ்டபிள்கள் சலபதி, அஞ்சி, மஞ்சுநாத் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு ஸ்டேஷனில் அமர்ந்து மது குடித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலை நேரத்தில் மது குடித்தது மட்டுமல்லாமல், காவல் நிலையத்தையே மினி பாராக மாற்றியுள்ள காவலர்கள் மேல் நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் காவல் நிலையத்தில் அமர்ந்து மது குடித்த மூன்று காவலர்களை விசாரித்து வருகின்றனர்.