இந்தியா

ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த நபர்! கண்ணிமைக்கும் நேரத்தில் உயிரை காப்பாற்றிய போலீஸ்! அதிர்ச்சி வீடியோ!

Summary:

police saved passenger from train

மேற்கு வங்க மாநிலம், மிதுனபுரி ரயில் நிலையத்தில் ரயில் ஏற முயன்றபோது தவறி விழுந்து சக்கரத்தில் சிக்கவிருந்த நபரை, உரிய நேரத்தில் ஆா்பிஎஃப் போலீஸாா் ஒருவர் வேகமாக ஓடிச்சென்று காப்பாற்றியுள்ளார்.

இந்தியாவின் மேற்குவங்கத்தை சேர்ந்த சுஜோய் கோஷ் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10:00 மணியளவில், காரக்பூர்-அசன்சோல் பயணிகள் ரயிலில் மிதுனபுரி ரயில் நிலையத்தில் ஏற முயன்றபோது தவறி கீழே விழுந்துள்ளார். அப்போது, ரயில் படிக்கட்டுகள் அவரது தலையிலும், கால்களிலும் தாக்கின.

 

அப்போது, அங்கு வந்த ஆா்பிஎஃப் போலீஸ் தா்மேந்திர யாதவ் என்பவர் சுஜோய் கோஷை கால்களால் பற்றி வெளியே இழுத்து மீட்டாா். பிளாட்பாரத்தின் சி.சி.டி.வி -யில் கோஷ் ரயிலால் இழுத்துச் செல்லப்படுவதும், படிக்கட்டுகளும் ரயில்பெட்டிகளும் அவரது தலை மற்றும் கால்களில் தாக்குவது பதிவாகியுள்ளது.

மருத்துவமனையில் சுஜோய் கோஷ், சிகிச்சைக்கு பின் நல்ல நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். சரியான நேரத்தில் ஆா்பிஎஃப் போலீஸ் தா்மேந்திர யாதவ் என்பவர் சுஜோய் கோஷை மீட்டதால் பயணியின் உயிர் பாதுகாக்கப்பட்டது. இது தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement