ஒரு நொடி தான்.. உயிரே போயிருக்கும்.. ஓடும் ரயிலில் இருந்து குதித்த நபர்களை காப்பாற்றிய போலீஸ் அதிகாரிகள்!

ஒரு நொடி தான்.. உயிரே போயிருக்கும்.. ஓடும் ரயிலில் இருந்து குதித்த நபர்களை காப்பாற்றிய போலீஸ் அதிகாரிகள்!


police-officers-rescue-passangers-fall-from-train

மும்பை கல்யாண் ரயில்வே நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்று தடுமாறி கீழே விழுந்த தந்தை மற்றும் மகனை போலீஸ் அதிகாரிகள் நொடிப் பொழுதில் காப்பாற்றியுள்ளனர்.

நேற்று மதியம் மும்பை கல்யாண் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு அதிகாரி சகு என்பவரும் மஹாராஷ்டிரா பாதுகாப்பு படை அதிகாரி சோம்நாத் என்பவரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மதியம் ஒரு மணி அளவில் ரயில் ஒன்று வந்துள்ளது.

ஒடும் ரயிலில் இருந்து 52 வயதுடைய நபர் ஒருவரும் அவரது மகனும் இறங்க முயன்றுள்ளனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த அவர்கள் தவறி கீழே விழுந்துள்ளனர்.

இதனை கண்ட பாதுகாப்பு அதிகாரிகள் உடனே பாய்ந்து சென்று கீழே விழுந்தவர்களை ரயிலுக்கு தூரமாக இழுத்து காப்பாற்றினர். இல்லையேல் அவர்கள் உயிரே போயிருக்க கூடிய சூழல் ஏற்பட்டிருக்கும்.

அதிகாரிகளின் இந்த துரித நடவடிக்கையானது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவால் பலரும் பாதுகாப்பு அதிகாரிகளை பாராட்டி வருகின்றனர்.