இந்தியா

குழந்தை பிறந்த சில மணி நேரத்திலேயே, இன்ஸ்பெக்டர் எடுத்த விபரீதம்! துடிதுடிக்கும் குடும்பத்தார்கள்!

Summary:

police man commits suicide for family problems

திரிபுராவில் வசித்து வந்தவர் ஜெயந்தா பைத்யா. 34 வயது நிறைந்த அவர் சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார். இந்த நிலையில்சமீபத்தில் அவர் திடீரென தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

 இந்நிலையில்  நீண்ட நேரமாக தனது மகன் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பைத்யாவின் தாயும் அவரது தம்பியும் அறைக்கதவை தட்டியுள்ளனர். கதவு திறக்கப்படாத நிலையில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு பைத்யா  தூக்கில் சடலமாக தொடங்கியுள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் கதறி துடித்தனர். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் பைத்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் தாஸ் கூறுகையில்,  ஜெயந்தா பைத்யா  கடந்த சில நாட்களாகவே குடும்ப பிரச்சினை காரணமாக தொடர்ந்து மன உளைச்சலில் காணப்பட்டார். மேலும் அவர் தற்கொலை  செய்து இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் அவருடைய மனைவிக்கும் குழந்தை பிறந்துள்ளது இந்நிலையில் அவரது மரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Advertisement