"நான் உயிரியல் ரீதியாக பிறக்கல., கடவுள்தான் என்னை பூமிக்கு அனுப்பினார்" - பிரதமர் மோடி பேச்சு.!PM Narendra Modi about God Send Me 

 

2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு, மத்தியில் ஆட்சியை பிடிக்க பாஜக Vs காங்கிரஸ் பலகட்ட முயற்சிகள் எடுத்துள்ளது. 7 கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்ட தேர்தலில் இன்னும் 2 கட்டங்கள் எஞ்சி இருக்கின்றன. விரைவில் அவை நடந்து முடிந்து ஜூன் 04 ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. 

காங்கிரஸ் Vs பாஜக நேரடி மோதல்

உலகமே உற்றுநோக்கும் இந்திய தேர்தலில், தொடர்ந்து 2 முறை ஆட்சியை பிடித்த பாஜக மீண்டும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகிறது. காங்கிரஸ் 2 முறை விட்ட ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் எண்ணத்துடன் செயல்பட்டு வருகிறது. 

இதையும் படிங்க: #Breaking: உள்துறை அமைச்சகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; அதிகாரிகள் சோதனை.!

மோடியை பூமிக்கு அனுப்பிய பரமாத்மா

இதனால் இந்திய அரசியல் களநிலவரம் என்பது கருத்து வேறுபாடுகள் கொண்ட கட்சிகளால் பல வாக்குறுதிகள், விமர்சனங்கள் என தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், "நான் உயிரியல் ரீதியாக பிறக்கவில்லை. கடவுள் என்னை பூமிக்கு அனுப்பியுள்ளார். எதோ ஒரு விஷயத்தினை செய்து முடிக்க பரமாத்மா என்னை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளார்" என கூறினார்.

இதையும் படிங்க: மணப்பெண்ணுக்கு முன் சீன் போட்ட மணமகன்; பளார் விட்டு அதிர்ச்சி கொடுத்த மணப்பெண்.!