தனது வாகனத்துக்கு பின்னால் ஆம்புலன்ஸ் வருவதை பார்த்ததும் பிரதமர் மோடி என்ன செய்தார் பாருங்க!! வைரல் வீடியோ..

தனது வாகனத்துக்கு பின்னால் ஆம்புலன்ஸ் வருவதை பார்த்ததும் பிரதமர் மோடி என்ன செய்தார் பாருங்க!! வைரல் வீடியோ..



PM Modi give way to ambulance viral video

ஆம்புலன்ஸ் செல்வதற்காக வழிவிட்ட பிரதமர் மோடியின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி அவர்கள் தனது சொந்த மாநிலமான குஜராத்தில் 36-வது தேசிய விளையாட்டு போட்டியை துவக்கி வைப்பதற்காக சென்றிருந்தார். மேலும் பல ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் துவக்கிவைத்தார் பிரதமர் மோடி.

modi

பின்னர், காந்திநகரில் இருந்து அகமதாபாத்துக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்தார். இந்நிலையில் காந்தி நகரில் இருந்து அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக காந்தி நகர்- அகமதாபாத் சாலை வழியே பிரதமர் மோடி தனது பாதுகாப்பு வாகனங்களுடன் பயணம் செய்தார்.

அப்போது அந்த வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று அவசரமாக வருவதை கண்ட பிரதமர் மோடி, உடனே தனது பாதுகாப்பு அதிகாரிகளிடம் கூறி, தனது வாகனத்தையும், பாதுகாப்பு வாகனங்களையும் ஓரமாக நிறுத்தி ஆம்புலன்ஸ் செல்ல உத்தரவிட்டார். பின்னர் ஆம்புலனஸ் பிரதமரின் வாகனத்தை கடந்து சென்றதும் பிரதமர் அங்கிருந்து புறப்பட்டார்.

பிரதமரின் இந்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகிவரும்நிலையில், பிரதமருக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர்.