சிறுத்தையின் கொடூர வேட்டையால் 3 பேர் பலி! பயம் இருந்தாலும் வயலுக்கு போனால் தான் வருமானம்! விவசாயிகள் கழுத்தில் கூர்மையான இரும்புக் காலர்களை அணிந்து... வைரல் வீடியோ..!!



pimparkhed-leopard-attacks-maharashtra

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள பிம்பர்கேட் கிராமம், அண்மைக் காலங்களில் சிறுத்தை தாக்குதல் காரணமாக கடும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது. கிராம மக்கள் தினசரி பாதுகாப்பு ஏற்பாடுகளுடனே புறப்பட்டுச் செல்லும் நிலை உருவாகியுள்ளது.

சிறுத்தையின் கொடூர தாக்குதலில் மூவர் பலி

கடந்த ஒரு மாதத்திலேயே 5 வயது சிறுமி, 82 வயது மூதாட்டி, 13 வயது சிறுவன் ஆகிய மூவர் உயிரிழந்தது கிராம மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால், விவசாய பணிகளுக்குச் செல்லும் போது கூட கூர்மையான இரும்புக் காலர்களை கழுத்தில் அணிந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: என்ன ஒரு தில்லாலங்கடி தனம்! ரோட்டில் சிதறி கிடக்கும் இரும்பு கம்பிகள்! மோசடி கும்பலின் சதிச்செயல்! அதிர்ச்சி வீடியோ...

“எங்களுக்கான ஒரே வருமானம் விவசாயம். பயம் இருந்தாலும் வயலுக்கு செல்ல வேண்டியதே,” என்று கிராம மக்கள் தங்கள் வேதனையை பகிர்ந்துள்ளனர். மேலும், தனது தாயும் இதே சிறுத்தையின் தாக்குதலில் பலியானதாக வித்தல் ரங்கநாத் ஜாதவ் சோகத்துடன் தெரிவித்துள்ளார்.

கிராம வாழ்க்கை முழுவதும் பாதிப்பு

நாள் முழுவதும் அச்சத்தில் வாழும் மக்கள் குழுவாகவே வயல்களுக்கு சென்று வருகின்றனர். பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பள்ளி நேரத்தையும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாற்றும் முயற்சி செய்யப்பட்டு வருகிறது.

சிறுத்தை சுட்டுக் கொல்லப்பட்டது

இதற்கிடையில், நவம்பர் 5 ஆம் தேதி வனத்துறை மற்றும் மீட்புக் குழு இணைந்து நடத்திய நடவடிக்கையில், 20 நாட்களில் மூன்று பேரைக் கொன்ற நரமாமிசச் சிறுத்தையை சுட்டுக் கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

பிம்பர்கேட் கிராம மக்கள் தங்களின் பாதுகாப்பிற்காக அரசு உடனடி மற்றும் நிலையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.