விமானத்தில் பெற்றோருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மகன்... நெகிழ்ச்சியில் மகனை வாரியணைத்த தாய்..!! pilot surprises his parents in plane

மகன் தான் விமானத்தை இயக்குகிறார் என தெரியாமல் பெற்றோர் பயணித்த நிலையில், ஜெய்ப்பூர் வந்ததும் தனது மகனே விமானஓட்டி என்று தெரியவர மகிழ்ச்சியில் மகனை கட்டியணைத்து சிரித்தனர். 

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரை சார்ந்தவர் கமல்குமார். இவர் விமானியாக பணியாற்றி வருகிறார். மேலும் ஜெய்பூருக்கு செல்லும் விமானத்தை இயக்கி வருகிறார். அந்த விமானத்தில் கமலின் பெற்றோர் பயணம் செய்த நிலையில், விமானத்தை தங்களது மகன்தான் இயக்க உள்ளார் என்பது அவர்களுக்கு தெரியாது. 

விமானி அறையில் இருந்து கமல் குமார் வெளியே வந்து, தனது பெற்றோர் முன்பு நின்ற நிலையில், இன்ப அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகனைப் பார்த்து கட்டி அணைத்துவாறு சிரித்தனர். கமல்குமாரின் தாய், மகனின் கையைப் பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 

பின் இருவரும் விமானி அறையில் சிறிது நேரம் அமரவைக்கப்பட்டனர். இந்த நெகிழ்ச்சி தருணம் தொடர்பான வீடியோவை கமல்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்தப் பதிவில், "நான் பறக்கத் தொடங்கியதில் இருந்து இந்த தருணத்திற்காக காத்திருந்தேன். இறுதியாக எனது பெற்றோருடன் ஜெய்பூருக்கு விமானத்தில் பறக்கும் வாய்ப்பு கிடைத்தது. இது யாருக்கும் கிடைக்காத ஒரு சிறந்த உணர்வு" என்று தெரிவித்துள்ளார். இது பலரும் கவனத்தைப்பெற்ற நிலையில், பாராட்டுகளை பெற்று வருகிறது.