பெட்ரோல் டீசல் விலை உயர்வால் போராட்டத்தில் குதித்த மக்கள்.! மாநில அரசு எடுத்த அதிரடி முடிவு.! ஒரே நாளில் அதிரடி குறைப்பு.!

பெட்ரோல் டீசல் விலை உயர்வால் போராட்டத்தில் குதித்த மக்கள்.! மாநில அரசு எடுத்த அதிரடி முடிவு.! ஒரே நாளில் அதிரடி குறைப்பு.!


petrol-price-reduced-in-meghalaya

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் இரு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்து வந்தது. இதனையடுத்து சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. 

அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைப்பிடித்து வருகிறது. தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. 

petrol

இந்த நிலையில் மேகாலயா மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இதுதொடர்பாக மேகாலயா மாநில முதலமைச்சர் கான்ராட் கே சங்மா, அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை(வாட் வரியை) குறைக்க அரசு முடிவு செய்தது.

இதன் விளைவாக மேகாலயா மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.5 குறைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், மேகாலயா மாநிலத்தை பின்பற்றி மற்ற மாநிலங்களும் வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.