பெட்ரோல் விலை திடீர் உயர்வு! தேர்தல் முடிவுகள் எதிரொலியா?
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை, அதிகரித்ததாலும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததாலும் பெட்ரோல், டீசல் விலை இரண்டு மாதங்களுக்கு முன்பு வரலாறு காணாத அளவு உயர்ந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்ததால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்தது. இதனால் மக்கள் வேதனை அடைந்தனர். இதனால் மக்கள் வாகனம் ஓட்டுவதையே தவிர்த்துவந்தனர்.
இந்நிலையில் 5 மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, கடந்த 57 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையானது சிறிது சிறிதாக குறைந்ததால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்தனர். ஆனால், நேற்று முன்தினம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, நேற்றைய விலையில் எந்த மாறுதலும் இல்லை.

ஆனால் சென்னையில் இன்று பெட்ரோல் விலை 12 காசுகள் அதிகரித்துள்ளது. நேற்று, லிட்டர் ரூ.72.82-க்கு விற்கப்பட்ட பெட்ரோல், இன்று ரூ.72.94 ஆக அதிகரித்துள்ளது. ஆனால், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. 3 நாட்களாக விலை மாற்றமின்றி டீசல் லிட்டருக்கு ரூ.68.26க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு ஏற்பட்ட இந்த விலை ஏற்றம் இதே நிலையில் வேடிக்கை விடுமோ என்ற அச்சத்தில் வாகன ஓட்டிகள் இருந்து வருகின்றனர்.