இந்தியா

நடுவானில் இந்திய போர் விமானத்திற்கு எரிபொருள் நிரப்பும் பிரான்ஸ் நாட்டு விமானம்..! வைரல் புகைப்படங்கள்..!

Summary:

Petrol filling while flying rafel air jet

பிரான்ஸ் நாட்டில் இருந்து கிளம்பியுள்ள ரபேல் போர் விமானங்கள் நாளை இந்தியா வந்தடையும் நிலையில், ரபேல் போர் விமானங்கள் நடுவானில் பறந்துகொண்டிருக்கும்போதே எரிபொருள் நிரப்பும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

பிரான்ஸ் நாட்டில் தயாரான ஐந்து ரபேல் போர் விமானங்கள் அந்நாட்டில் இருந்து நேற்று கிளம்பிய நிலையில் நாளை இந்தியா வந்தடைகிறது. சுமார்  7,000 கி.மீ., துாரத்தை கடந்து வரும் இந்த விமானங்களுக்கு நடுவானிலையே எரிபொருள் நிரப்புவதற்காக பிரான்ஸ் விமானமும் உடன் வருகிறது.

இந்நிலையில் நடுவானில் பறந்துகொண்டிற்கும் ரபேல் போர் விமானத்திற்கு பிரான்ஸ் நாட்டின் விமானம் எரிபொருள் நிரப்பும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. சுமார் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தவாரே எரிபொருள் நிரப்பும் காட்சிகள் பார்பதற்க்கே பிரமிப்பாக உள்ளது.


Advertisement