மவனே.. இனிமேல் திருடுவ... ரயிலில் செல்போன் பறிக்க முயன்ற திருடனுக்கு உயிர்பயத்தைக் காட்டிய பயணிகள்.! வைரல் வீடியோ

மவனே.. இனிமேல் திருடுவ... ரயிலில் செல்போன் பறிக்க முயன்ற திருடனுக்கு உயிர்பயத்தைக் காட்டிய பயணிகள்.! வைரல் வீடியோ


pasengers punishment to mobile thief

பீகார் மாநிலத்தில் ஓடும் ரயிலில்  பயணிகளிடம் இருந்து செல்போன் பறிக்க முயற்சி செய்த ஒரு  நபரைக் கையும் களவுமாகப் பிடித்த பயணிகள், ரயில் பெட்டிக்குள் இருந்தபடி,  திருடனின் கையைப் பிடித்து, சுமார் 15 கிமீ தூரம் திருடனை தொங்கியபடியே இழுத்துச் சென்றனர்.

ரயிலில், வெளியில் தொங்கிக்கொண்டு, மன்னிப்புக் கேட்டுகொண்டு, யாரிடம் செல்போனை பறிக்க முயன்றாரோ அவரிடமே உயிர்ப்பிச்சை கேட்டுக்கொண்டு அவர் பயணித்துள்ளார். பயணிகள் ஒருவகையில் அந்தத் திருடனை தண்டிக்க நினைத்தாலும், அவருக்கு படம் புகட்டி, அவரது உயிரையும் கைப்பறியுள்ளனர்.

இறுதியாக ஜன்னலில் தொடங்கவிடப்பட்ட திருடன் குறிப்பிட்ட தூரம் வந்ததும்  போலீஸாரிடம் அவனை ஒப்படைத்தனர். திருடன் வெளியே தொங்கியபடி பயணித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.