BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
அடகொடுமையே.. போதைக்காக பெற்ற பிள்ளைகளை விற்ற பெற்றோர்.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் போதை மருந்து வாங்குவதற்காக பெற்ற குழந்தைகளை விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சபீர்-சனியா. இவர்கள் இருவரும் போதைக்கு அடிமையானவர்கள். இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் இருந்த நிலையில், அதில் இரண்டு குழந்தைகளை விற்று போதை பொருள் வாங்க பணம் தயார் செய்துள்ளனர்.

என்ன நிலையில் இவர்கள் இருவரும் தங்களது ஒரு குழந்தையுடன் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு உங்களுடைய மற்ற இரண்டு பிள்ளைகள் குறித்து கேட்டபோது போதைப் பொருள் வாங்குவதற்காக விற்று விட்டதாக கூறியுள்ளனர்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக போலீசில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பெண் குழந்தையை 14,000 ரூபாய்க்கும், ஆண் குழந்தையை 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்தது தெரியவந்தது.