இந்தியா

கதறி துடிக்கும் பெற்றோர்! ஒரு வயது குழந்தைக்கு இப்படி ஒரு வியாதியா?நெஞ்சை உலுக்கும் சம்பவம்.

Summary:

Parents filed case for mercy murder for 1 year old baby

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியை சேர்ந்தவர் பாபு ஜான். இவரது மனைவி சமீனா. இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் பிறந்து இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைவால் அந்த இரண்டு குழந்தைகளும் உயிர் இழந்த நிலையில் தற்போது அவர்களின் மூன்றாவது குழந்தைக்கும் அதே நோய் ஏற்பட்டுள்ளது.

இந்த நோய் மிகவும் அரிதான ஓன்று என்பதால் நோய்க்கான சிகிச்சைக்கு அதிக பணம் தேவைப்படுகிறது. இதனால் தனது அணைத்து சொத்துக்களை விற்றும், கடன் வாங்கி சிகிச்சை அளித்தும் குழந்தைக்கு நோய் குணமாகவில்லை.

கூலி தொழிலாளியான என்னால் இதற்கு மேல் எதுவும் செய்ய இயலவில்லை என்றும், தனது குழந்தையை கருணை கொலை செய்ய அனுமதிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.


Advertisement