வேட்டையன் படம் ஓடிய திரையரங்கில் காலாவதியான பாப்கார்ன்; ரஜினி ரசிகர்கள் ஆவேசம்.!
பெற்றோர்களே உஷார்!! சாக்லேட் எடுக்க சென்ற சிறுமியின் உயிரை பறித்த பிரிட்ஜ்..அதிர்ச்சி சம்பவம்.!
தெலுங்கானா மாநிலம் நவி பேட்டா கிராமத்தில் வசித்து வருபவர்கள் சேகர்- சம்யுக்தா தம்பதியினர். இவர்களுக்கு 4 வயதில் ரித்திஷா என்ற மகள் ஒருவர் உள்ளார். இவர்கள் தங்கள் குடும்பத்துடன் நந்திப்பேட் கிராமத்தில் உள்ள தங்கள் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தனர்.
அப்போது அப்பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு சேகர் தனது மகளை அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு ரித்திஷா சாக்லேட் எடுப்பதற்காக சூப்பர் மார்க்கெட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியை திறந்திருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி குழந்தை பிரிட்ஜின் கதவை பிடித்தபடியே தொங்கிகொண்டிருந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ரித்திஷாவின் தந்தை குழந்தையை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை அபாய கட்டத்தில் உள்ளதாக கூறியுள்ளனர். இதனால் பதறிப்போன சேகர் ரித்திஷாவை வேறொரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார் . ஆனால் அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ரித்திஷாவின் பெற்றோர் கதறி துடித்த காட்சிகள் அங்கிருந்தவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.