பெற்றோர்களே ஜாக்கிரதை! 5 மாத குழந்தை தொண்டையில் சிக்கிய ஊக்கு..அறுவை சிகிச்சை செய்து அகற்றிய மருத்துவர்கள்!!

பெற்றோர்களே ஜாக்கிரதை! 5 மாத குழந்தை தொண்டையில் சிக்கிய ஊக்கு..அறுவை சிகிச்சை செய்து அகற்றிய மருத்துவர்கள்!!



parents-beware-a-5-month-old-baby-had-a-colic-stuck-in

மேற்கு வங்கம் ஹுக்ளியின் ஜாங்கிபாரா பகுதியை சேர்ந்தவர்கள் ஜுக்ரா மற்றும் தேசா தம்பதியினர். இவர்களுக்கு 5 மாத ஆண் குழந்தை இருந்து வந்த நிலையில் திடீரென்று குழந்தைக்கு முச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனே குழந்தையை கொல்கத்தா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஊக்கை விழுங்கி இருப்பதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.

Parents beware

இதனையடுத்து உடனே அறுவைசிகிச்சை செய்து குழந்தையின் தொண்டையில் இருக்கும் ஊக்கை அகற்றினால் தான் குழந்தையால் சீராக மூச்சு விட முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் பெற்றோரின் சமதத்துடன் குழந்தைக்கு அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இதனைதொடர்ந்து இஎன்டி துறை மருத்துவரான சுதீப்தாஸ் தலைமையில் குழந்தைக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டு ஊக்கை வெற்றிகரமாக குழந்தையின் தொண்டையில் இருந்து அகற்றினார்.