ரெயில் தண்டவாளங்களை தகர்க்க பாகிஸ்தான் உளவு அமைப்புகள் சதி!..வெளியான அதிர்ச்சி தகவல்..!

ரெயில் தண்டவாளங்களை தகர்க்க பாகிஸ்தான் உளவு அமைப்புகள் சதி!..வெளியான அதிர்ச்சி தகவல்..!


Pakistan spy agency ISI plans to demolish railway tracks

சண்டிகர் பஞ்சாப் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரயில் தண்டவாளங்களை தகர்க்க பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத் துறை எச்சரித்துள்ளது.

பஞ்சாபில் காலிஸ்தான் அமைப்பினர் மற்றும் ஸ்லீப்பர் செல்கள் மூலம் ரயில் தண்டவாளத்தை தகர்க்க பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ சதிதிட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனை தொடர்ந்து இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இந்திய உளவுத்துறை வெளியிட்ட தகவலில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு பஞ்சாபில் ரயில் தண்டவாளங்களை தகர்க்க பெரிய அளவில் சதித்திட்டம் தீட்டியுள்ளது. பஞ்சாப் மற்றும் அதனை சுற்றி உள்ள மாநிலங்களில் சரக்கு ரயில்களை இலக்காகக் கொண்டு இந்த தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக காலிஸ்தான் அமைப்பிற்கும் ஸ்லீப்பர் செல்களுக்கும் பணம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து பஞ்சாப் ஹரியானா ராஜஸ்தான் மாநிலங்களில் தண்டவாள பகுதியில் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.