அரசியல் இந்தியா

சுவர் ஏறி குதித்து முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ அதிகாரிகள்!

Summary:

P Chidambaram arrested by cbi

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் அவரது வீட்டின் சுவர் ஏறி குதித்து கைது செய்தனர். 

இன்று மாலை டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து ப.சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதனைத் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்ய அங்கு விரைந்தனர். 

ஆனால் சிதம்பரம் அங்கிருந்து உடனடியாக கிளம்பி டெல்லியில் இருக்கும் தனது வீட்டிற்கு விரைந்தார். அவரை பின் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகளும் விரைந்தனர். ஆனால் சிதம்பரம் வீட்டிற்குள் சென்றதும் கதவுகள் முற்றிலும் அடைக்கப்பட்டன. 

வீட்டின் முன்பு காங்கிரஸ் ஆதரவாளர்கள் குவியத் துவங்கினர். அவரது வீட்டின் கதவுகள் திறக்கப்படாததால் சிபிஐ அதிகாரிகள் இல்லத்திற்குள் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றனர். 


இறுதியாக, ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவரை சிபிஐ அதிகாரிகள் அவர்களுடைய காரில் அழைத்துச் சென்றனர். ப.சிதம்பரம் உடன் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் வழக்கறிஞர்களுமான அபிஷேக் மனு சிங்கி மற்றும் கபில் சிபில் உடன் சென்றனர்.


Advertisement