யாரு சாமி அவர்...! தீபாவளி பரிசாக ஊழியர்களுக்கு ரூ 6 லட்சம் மதிப்புள்ள கார் .!owner gifted car to labour

தீபாவளி பரிசாக ஊழியர்களுக்கு ரூ 6 லட்சம் மதிப்புள்ள கார் பரிசு வழங்கும் நிறுவனத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ஹரியானா மாநிலத்தில் மிட்ஸ்கார்ட் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் எம்.கே.பாட்டியா தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக 6 லட்சம் மதிப்புள்ள டாடா பன்ச் காரை பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

மிட்ஸ்கார்ட் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட நிலையில், நிறுவனத்தின் உரிமையாளர் தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த மாதமே காரை பரிசாக வழங்கி விட்ட நிலையில், ஊழியர்களுக்கு கார் சாவியை வழங்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இது குறித்து பேசிய மிட்ஸ்கார்ட் நிறுவனத்தின் உரிமையாளர், தன்னுடைய ஊழியர்களின் அர்ப்பணிப்பும், கடினமான உழைப்பு என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதன் காரணமாகவே அவர்களுக்கு சிறப்பான பரிசை வழங்க வேண்டும் என தீர்மானித்தேன், அதனடிப்படையில் சிறப்பாக பணியாற்றிய 12 ஊழியர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு காரை பரிசாக வழங்கினேன் என தெரிவித்துள்ளார்.