அட.. இந்த படமெல்லாமா!! ஓடிடியில் இந்த வாரம் ரிலீசாகும் புதிய தமிழ் படங்கள்.! என்னென்ன பார்த்தீங்களா!!



OTT new movie release in this week

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய படங்கள் ரிலீசாவது போன்று ஓடிடியிலும் புது படங்கள் ரிலீசாகி வருகிறது. ஓடிடியில் புது படங்களின் வரவிற்காக ரசிகர்கள் பெருமளவில் காத்திருக்கின்றனர். அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவிருக்கும் தமிழ் படங்கள் குறித்து காணலாம்.

சட்டமும் நீதியும்

OTT

பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில்
நடிகர் சரவணன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள வெப் தொடர்தான் சட்டமும் நீதியும். இதனை சசிகலா பிரபாகரன் தயாரித்துள்ளார். இந்த வெப்சீரிசில்  நாயகியாக நம்ரிதா நடித்துள்ளார். குற்றம், வழக்கு,நீதிமன்றம் ஆகியவற்றை மையமாக கொண்ட இந்த வெப் தொடர் வரும் ஜூலை 18ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க: மோசடி வழக்கு.! திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தருக்கு மும்பை போலீஸ் சம்மன்.! என்ன நடந்தது?

குபேரா

OTT
இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் இந்த மாதம் வெளிவந்த திரைப்படம் குபேரா. இப்படத்தில் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று ஹிட்டான குபேரா திரைப்படம் வரும் ஜூலை 18 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.

டிஎன்ஏ

OTT

இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, நடிகர் அதர்வா நாயகனாக நடித்து வெளிவந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படம் டிஎன்ஏ. இதில் கதாநாயகியாக நிமிஷா சஜயன் நடித்திருந்தார். டிஎன்ஏ படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார்.  படம் ஜூலை 19 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது.

படைத் தலைவன்

OTT

நடிகர் விஜயகாந்தின் இளைய மகனான சண்முகப் பாண்டியன் ஹீரோவாக நடித்து வெளிவந்த திரைப்படம் படைத்தலைவன். இந்த படத்தை அன்பு இயக்கியுள்ளார். படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். படைத்தலைவன் வெளிவந்து மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இப்படம் வரும் ஜூலை 18 டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் ரிலீசாகிறது.

மனிதர்கள்

OTT

ராம் இந்திரா இயக்கத்தில் சிறு பட்ஜெட்டில் உருவான திரைப்படம் மனிதர்கள்.இப்படத்தில் கபில் வேலவன், குணவேந்தன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் ஜூலை 18 ஆம் தேதி  ஆஹா ஓடிடி தளத்தில்  வெளியாக உள்ளது.

இதையும் படிங்க: அப்படித்தான்.. போடு.. அறிவுக்கரசியை வெளுத்து வாங்கிய குணசேகரன் வீட்டுப் பெண்கள்! எதிர்நீச்சல் புரொமோ...