இந்தியா லைப் ஸ்டைல்

முதுகு சொறிய ஜே.சி.பி இயந்திரத்தை பயன்படுத்திய முதியவர்! அப்புறம் என்னாச்சு பாருங்க! வைரலாகும் வீடியோ காட்சி.

Summary:

முதுகு சொரிய முதியவர் ஒருவர் ஜே.சி.பி இயந்திரத்தை பயன்படுத்தும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

முதுகு சொரிய முதியவர் ஒருவர் ஜே.சி.பி இயந்திரத்தை பயன்படுத்தும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

கட்டுமானப்பணி, பள்ளம் தோண்டுதல் என பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டுவரும் பிரபலமான இயந்திரங்களில் ஒன்று ஜே.சி.பி. இப்படி பல்வேறு விஷயங்களுக்கு பயன்படும் இந்த பெரிய இயந்திரத்தை முதியவர் ஒருவர் முதுகு சொரிய பயன்படுத்தும் காட்சிதான் தற்போது வைரலாகிவருகிறது.

அப்துல் நாசர் என்ற முகநூல் பயனர் ஒருவர் வெளியிட்டுள்ள 41 நொடி வீடியோ காட்சியில், முதியவர் ஒருவர் தனது துண்டினால் தனது முதுகை சொரிந்துகொண்டே வர, பின்னர் அவர் அங்கு நின்றுகொண்டிருக்கும் ஜே.சி.பி இயந்திரம் முன் சென்று தனது முதுகை காட்டி நிற்கிறார்.

உடனே ஜே.சி.பி ஆபரேட்டர் ஜே.சி.பி இயந்திரத்தின் மூலம் அந்த முதியவரின் முதுகை சொறிந்துவிடுகிறார். என்னதான் பார்ப்பதற்கு இந்த காட்சி சிரிப்பை வரவழைத்தாலும், இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட கூடாது என பலரும் எச்சரிக்கையும் செய்கின்றனர்.


Advertisement