மொழிப்பிரச்சனையால் சர்ச்சையான ஆன்லைன் மீட்டிங்; தமிழ், கன்னட பணியாளர்களின் வாக்குவாதம்; வைரலாகும் வீடியோ.!

மொழிப்பிரச்சனையால் சர்ச்சையான ஆன்லைன் மீட்டிங்; தமிழ், கன்னட பணியாளர்களின் வாக்குவாதம்; வைரலாகும் வீடியோ.!



office-zoom-meeting-went-wrong-due-to-hindi

 

இன்றளவில் வீட்டில் இருந்து ஐடி உட்பட பல்வேறு துறைகள் பணியாளர்களை வேலை பார்க்க அனுமதி வழங்குகிறது. அவ்வப்போது இவர்கள் நேர்காணல் வாயிலாக ஆலோசனை நடத்துவதும் உண்டு. இணையவழி உலகில் இந்திய அளவிலும், வெளிநாட்டு அளவிலும் உள்ள நிறுவனங்களை சேர்ந்த பணியாளர்கள், தங்களின் வீடுகளில் இருந்து பணியாற்றி வருகின்றனர். 

இவர்களை ஒன்றிணைக்க ஆங்கிலம் மொழி உதவுகிறது. சில வடமாநில நிறுவனங்களில் வேலை பார்ப்போர், ஆலோசனை கூட்டத்தின்போது தங்களின் பிராந்திய மொழியான ஹிந்தியில் பேசுவது உண்டு. ஆனால், அவர்களின் கீழ் பணியாற்றும் நபர்கள் வெவ்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம். இந்நிலையில், அவ்வாறான அலுவலகம் ஒன்றின் ஆலோசனை கூட்டம் நடக்க, மேலாளர் ஆங்கிலத்தில் உரையாற்ற தொடங்கி, ஹிந்தியில் பேசுகிறார். 

இதனால் அதிருப்தியடைந்த 2 பேர், அதற்கு எதிராக குரல் எழுப்பி ஆங்கிலத்தில் பேச வற்புறுத்துக்கின்றனர். ஏனெனில் அவர்கள் இருவரும் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அவர்களுக்கு ஹிந்தி தெரியாது, ஆனால் ஆங்கிலம் தெரியும். இதுகுறித்து கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து ஆங்கிலத்தில் பேச தொடங்கிய மேலாளர், சில வினாடிகளில் மீண்டும் ஹிந்தியில் பேசுகிறார். இதனால் ஆத்திரமடைந்த கன்னட பெண் நான் கன்னடத்தில் பேசுகிறேன் என்று கூற, தமிழரோ அனைவரும் மியூட்டில் போடுங்கள், நான் தமிழில் பேசுகிறேன் என்று கூறுகிறார். 

59 நொடிகள் பதிவு செய்யப்பட்ட காணொளி, சமூக வலைத்தளங்களில் வெளியாகி மில்லியன் கணக்கான பார்வையாளர்களை கடந்து பல விவாதத்தை உருவாக்கி இருக்கிறது.